Verse of the Day

கடைசி நாட்களில் பரிசுத்த ஆவியானவர் ........

on Monday, April 20, 2009

ஏன் கடைசி நாட்களில் அவரை வாஞ்சிக்கிற எல்லோர் மேலும் தன்னுடைய ஆவியை ஊற்ற வேண்டும்.
உலகத்தோற்றத்திற்கு முன்பாக நம்மைத் தெரிந்து கொண்டவர், தாயின் கருவில் உருவாவதற்கு முன்னே நம்மை அறிந்து கொண்ட தேவன் ஏன் கடைசி நாட்களில் என் ஆவியை மாம்சமான யாவர் மேலும் ஊற்றுவேன் என்று சொல்ல வேண்டும் காரணம் உண்டு தொடர்ந்து வாசியுங்கள்.
ஒரு தகப்பன் தன் மகன் ஐ.டி. கம்பெனியில் நல்ல வேலையில் உள்ளான். மாதம் ரு.50000/- க்கு மேல் சம்பாதிக்கிறான். ஆனால் தன்னையோ கண்டு கொள்வதில்லை. விடுமுறை நாட்களில் கூட வீட்டில் இருப்பதில்லை கிளப், கேள் பிரண்ட் என்று மது அருந்தி இரவில் வெகுநேரம் கழித்து வருகிறான். கேட்டாள் நான் சம்பாதிக்கிறேன் அப்படி இப்படித்தான்இருப்பேன் வேண்டுமென்றால் வீட்டில் இருங்கள் இல்லையேல் வீட்டை விட்டு வெளியேறுங்கள் என்று கத்துகிறான். ஐயோ இந்த ஐ.டி. கம்பெனிகளின் வீழ்ச்சியினால் என் மகனுக்கும் வேலை போய்விட்டால் தன்னுடைய தவறான வழியைவிட்டு திருந்தி என்னுடைய மகனாவது இருப்பானே என்று அங்கலாய்த்த தகப்பனுடைய குரலைப் படித்தேன்.

ஏற்கனவே திருமணமாகி பிள்ளைகளைப் பெற்ற ஒருவர் அதை மறைத்து என்னை திருமணம் செய்தார். பல நாட்கள் கழித்து எனக்கு தெரிந்த போது என் வாழ்க்கையே இடிந்து போய்விட்டதே என்று நொடிந்திருக்கும் வேளையில் எனக்கு பிறந்த குழந்தையும் சரீர ஊனமாய் பிறந்து என் வாழ்க்கையையே இருளாகி விட்டதே என்று தன் வாழ்க்கையை நொந்து தினம் தினம் வேதனையோடு காலத்தை தள்ளும் தாயாரின் அழுகுரலைப் பற்றி கேள்விப்பட்டேன்.

இவைகளல்லாமல் ஊழியத்தின் பாதையில் சந்தித்த குடும்பத்தின் அழுகுரல் இன்னும் காதுகளை இரணமாக்கிக் கொண்டு தான் இருக்கிறது. ஆம், தன்னுடைய கணவன் தனக்கும் தன் இரண்டு பிள்ளைகளுக்கும் துரோகம் செய்து ஏற்கனவே திருமணமாகி கணவன் பிள்ளைகளோடு வாழும் ஒரு பெண்ணோடு வாழ்ந்து வருகிறார். அப்பெண்ணுடைய கணவன் போலிஸ் ஸ்டேசன் என்று போன பின்பும் தொடர்பை விட்டதாக இல்லை. அப்பெண் எங்கே மனம் மாறி தன்னுடைய குடும்பத்தோடு இணைந்து விடுவாளோ என்றெண்ணி மாந்திரிகம் செய்து அப்பெண்ணின் மனதை மாற்ற முயற்சி வேறு செய்கிறாராம். இதற்கிடையில் இவர்களுடைய தொடர்பால் குழந்தை வேறு பிறந்து விட்டதாம் என்று சாபத்தின் மேல் சாபத்தை வருவித்துக் கொண்ட தன்னுடைய கணவனைப் பற்றி கண்ணீர் விட்ட சகோதரியைக் கண்டேன்.

இதற்கெல்லாம் காரணம் இன்றைய இளைய தலைமுறையினர் சிறு வயதிலே அதிகம் சம்பாதிப்பதால் அவர்கள் கெட்டுப் போய்விடுகின்றனர். ஐ.டி. கம்பெனியில் இரவும் பகலும் வேலை என்பதால் அவர்கள் சூழ்நிலை அவர்களை மாற்றி பரிசுத்தக் குலைச்சலை கொண்டு வருகிறது. சென்னை போன்ற பெரு நகரங்களில் இதெல்லாம் தவிர்க்க முடியாதது என்று சொன்னாலும், இன்னும் போக போக கலாச்சாரம் சீரழியுமே அல்லாமல் சீரடையாது என்று சிந்தனையாளர்கள் எச்சரித்தாலும் பரிசுத்த வேதாகமம் மட்டும் “ ஒரு பெண்ணை இச்சையோடு நோக்குகிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ் செய்தாயிற்று“ (மத்தேயு 5-28) என்று ஏறக்குறைய இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பாக எச்சரிக்கை விட்டிருக்கிறது. இராண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக சொல்லப்பட்ட வேதாகமத்தின் இந்த கற்பனை இந்த கலியுகத்திற்கு பொருந்துமா? அன்று வாழ்ந்த கண்ணியமான மக்களுக்கு இது எளிதாக இருக்கலாம். ஆனால் பாவம் பெருத்திருக்கும் இந்த நாட்களில். பாவத்தை தண்ணீரைப் போல பருகும் இந்த நாட்களில் இப்படி சிந்தனையில் பரிசுத்தம் சாத்தியமா? என்று இன்றைய ஐனங்கள் கேட்கும் கேள்விகளை பரலோகம் அன்றே யோசித்து தான் “ கடைசி நாட்களில் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன் “ என்று கூறுகிறது.

உங்களுடைய மாம்ச பெலத்தால், அல்லது மனதை ஒருமனப்படுத்தி சாதித்து விடலாம் என்ற வழிமுறையினால், அல்லது நல்ல சிந்தனைகளை வளாத்துக் கொள்வதால் என்று எத்தனை வழிமுறைகளில் முயற்சி செய்தாலும் கிடைப்பதென்னவோ நிச்சய தோல்விதான். ஆம் பாவம் தண்ணீரைப்போல ஓடும் இந்த நாட்களில் அதாவது கடைசி நாட்களில் தேவனுடைய ஆவியானவருடைய பெலத்தினாலேயன்றி ஒருவனும் பரிசுத்தமாய் வாழ்வதோ அல்லது பரிசுத்தத்தைக் காத்துக் கொள்வதென்பதோ கூடாத காரியம். இயேசுகிறிஸ்துவின் இரத்தம் எப்படி ஒருவனுடைய பாவத்தைக் கழுவி சுத்திகரிக்கிறதோ அது போல பரிசுத்தஆவியானவரின் பிரசன்னம் பாவம் கழுவப்பட்ட ஒருவனை பரிசுத்தமாய் வாழச்செய்கிறது. எனவே ஆவியானவருடைய பெலத்தினால் அல்லாமல் எத்தனை வயதான மனுஷனாய் காணப்பட்டாலும் பாவச் சிந்தனைகளை மேற்கொள்வது என்பது முடியாத காரியம்.

இன்னும் ஒரு சாரார் நான் பரிசுத்த ஆவியை பெற்றுக் கொண்டேன் இனி நான் பாவத்தில் வீழ்வதே இல்லை என்று மனம் போன போக்கில் வாழ்ந்து, தங்களின் பின் நிலைமையை முன் நிலைமையிலும் அதிக கேடுள்ளதாய் மாற்றுகிறார்கள் எனவே பரிசுத்த ஆவியானவரை பெற்றுக் கொள்வது எப்படி முக்கியமானதோ அப்படியே ஆவியானவரை துக்கப்படுத்தாதபடி காத்துக் கொள்வதும் அவர் சொல்கிறபடி நடப்பதும் முக்கியமானதே.

எனவே தேவ ஜனங்கள் தங்களை நெருக்கும,¢ கெடுக்க நினைக்கும் பாவச் சூழநிலைகளை உடனடியாக தள்ளி விட ஆயத்தமாயிருக்க வேண்டும். பாவச் சூழல் நிறைந்த உன் நண்பர்களை விட்டு பரிசுத்தத்தை வாஞ்சித்து அந்த ரூமை காலி செய்து இன்னொரு இடத்திற்கு செல்ல நீ வாஞ்சிக்கும் வாஞ்சையைப் பார்த்து நம்முடைய பரிசுத்த தேவன் அடையும் சந்தோஷம் எவ்வளவு தெரியுமா? இந்த வேலையில் இதற்கு மேல் தொடர்ந்தால் கண்டிப்பாக நாம் கறைபடுவோம் என்றெண்ணி வேலையை தூக்கியெரிய தீர்மானித்தால்¢ வேலை கிடைப்பதே அரிதான இக்காலத்தில் உன்னைத் தேடி வேலையைத் தர கர்த்தர் வாஞ்சையாயிருக்கிறார். எனவே எப்படியாகிலும் நெருப்பு சூடும் என்பதை அறிந்து அந்த இடத்தை விட்டு நகர்வது நல்லது மாறாக சூட்டபின் மருந்து போட்டு ஆற்றினாலும் அதினால் ஏற்பட்ட வடு உன் வாழ்நாளெல்லாம் வருத்துமல்லவா? எனவே பாரமான யாவற்றையும் நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட ஆயத்தமா?

0 comments:

Post a Comment